மறைந்திருக்கும் வேர்கள்
அறையெங்கும் தேடிப் பார்த்து
விட்டு
அலுத்துப் போனான்
அந்த போன்சாய் மரத்தின்
வேர்களை.
*****
கருணை
என்றோ ஊற்றிய கருணைக்காக
இன்றும் பூத்துக் கொண்டிருக்கிறது
வாசலில் பூச்செடி.
*****
நட்பினி விஷம்
கொத்துவது என முடிவெடுத்த பின்
மனிதர்களுக்கும்
விஷ நாகத்திற்கும்
வித்தியாசம் கம்மி.
*****
No comments:
Post a Comment