13 Mar 2017

ஓரு ஊர்ல ஒரு ஏ.டி.எம்.


ஓரு ஊர்ல ஒரு ஏ.டி.எம்.
            "ஒரு ஊர்ல ஒரு ஏ.டி.எம்.மாம்!" என்று டிரெண்டியாக கதை சொல்வதாக நினைத்து பாட்டி ஆரம்பிக்க, "அங்க ஊரே கூடி நின்னுச்சாம் பணம் எடுக்க!" என்ற கதையை முடித்தாள் பேத்தி.
*****
அண்ணனும், அக்காவும்
            பதின்ம வயதுகளில் அண்ணன் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தான். அக்கா வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தாள். ஏனென்று புரியவில்லை தம்பிக்கும், தங்கைக்கும்!
*****
கல்யாணம் ஆன பின்...
            கல்யாணம் ஆன பின் புகுந்த வீட்டுக்குப் போனாள் அக்கா. தனிக்குடித்தனம் போனான் அண்ணன்.
*****

No comments:

Post a Comment