10 Feb 2017

பத்தாயிரத்தைக் கடந்து விட்டோம்!


பத்தாயிரத்தைக் கடந்து விட்டோம்!
            இதுவரை பத்தாயிரம் பார்வைகளைக் கடந்து விட்டோம். பார்வையிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைக் கூற வேண்டும்.
            ஒரு தாய் தன் குழந்தையின் குறும்புகளைப் பொறுத்துக் கொண்டு ரசிப்பது போல, நீங்களும் பொறுத்துக் கொண்டு ரசித்து இருக்கிறீர்கள். குழந்தையின் குறும்புகள் ஒவ்வொன்றும் உயிர்ப்பின் மொழிகள். பேரானந்தத்தின் விழிகள்.
            உலகில் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் இருந்தும் பார்வையிட்டுள்ளீர்கள். உங்கள் பரந்த மனதுக்கு கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் இருக்கும் அற்புதமான நாடுகளில் எவ்வளவோ பார்க்க இருந்திருக்கும். அவைகளுக்கும் மத்தியில் இதையும் கொஞ்சம் பார்வையிட்டுள்ளீர்கள் என்பது உங்களது மகத்தான கருணையைக் காட்டுவதாகவே உணர்கிறேன்.
            இன்னும் பார்க்கப்பட வேண்டியது நிறைய உள்ளது.
            கண்களுக்குத் தெரிவதெல்லாம் பார்வைகள் அல்ல.
            அதைத் தாண்டிப் பார்க்கப்பட வேண்டியவைகள் நிறைய உள்ளன. அகக்கண்களின் இமைகள் மூடி இருப்பது அறியாமலே இறந்து போனவர்கள் இந்த பூமியில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
            இறந்துப் போன அந்த ஆத்மாக்களின் நிராசையாக இருக்கும் தரிசனங்களைப் பார்ப்பது அற்புதம். அது ஓர் அதிசயம்.
            அற்புதங்களும், அதிசயங்களும் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பார்ப்பவர்களின் கண்களுக்குத்தான் அது தெரிகின்றன.
            உங்களுக்கும் அந்த ஆசை இருக்கும்.
            இந்த வலைப்பூ மலரும் ஒவ்வொரு நாளும் அதை உங்களுக்குக் காட்டும். உங்கள் அகக்கண்களின் இமைகளைத் திறக்கும் சூட்சுமம் பூக்களுக்கே இருக்கின்றன என்பதை இந்த வலைப்பூவைப் பார்க்கும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நீங்களே அறிய வருவீர்கள்! வாருங்கள் அறிவதற்கு!
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...