21 Feb 2017

மாநிலம் விட்டு மாநிலம்


மாநிலம் விட்டு மாநிலம்
            சமத்து சம்புலிங்கம் தமிழ்நாட்டு எம்.எல்.ஏ.
            அவர் சமீப காலமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.
            தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் மட்டும் எப்போது பார்த்தாலும் ஆள் மிஸ்ஸிங்.
            நிருபர்கள் சூழ்ந்து கொண்டு இந்த விசித்திரப் போக்கு குறித்து சம்புலிங்கத்தைக் கேள்வி கேட்டனர். "எதுக்கு தமிழ்நாட்டு எம்.எல்.ஏ.வா இருந்துகிட்டு வேற மாநிலத்து சட்டப்பேரவைகளாக பார்த்துக் கலந்துக்குறீங்க?" 
சம்புலிங்கம் சொன்னார், "குண்டுகட்டா தூக்கி வெளியில போட்டுடறாங்கன்னுதான்!"
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...