இது என்ன இடம்?
வெளிநாட்டுப் பயணி ஒருத்தர் சென்னையைச்
சுற்றிப் பார்க்க வேண்டும் என்று சமத்து சம்புலிங்கத்தின் ஆட்டோவில் ஏறினார்.
சென்னை கடற்கரையிலிருந்து ஆட்டோவை இயக்கத்
தொடங்கினார் சம்புலிங்கம். அப்போது கடற்கரையோரம் அமைதியாக அமர்ந்து தங்கள் கருத்துகளைச்
சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள்.
"இது என்ன இடம் என்று கேட்டார்?"
வெளிநாட்டுப் பயணி.
"மெரீனா பீச்!" என்றார் சம்புலிங்கம்.
"பள்ளி வளாகம், மெதுவாகச் செல்லவும்!"
என்ற அறிவிப்புப் பலகையைக் கடந்து ஆட்டோவை சம்புலிங்கம் ஓட்டிச் சென்ற போது, யூனிபார்ம்
அணிந்த குழந்தைகள் பலர் அந்தக் கட்டடத்திலிருந்து, "பீஸ் கட்டலேன்னா இனிமே உள்ள
வராதீங்க!" என்ற மிரட்டலோடு தூக்கி வீசப்பட்டார்கள்.
"இது என்ன இடம் என்று கேட்டார்?"
வெளிநாட்டுப் பயணி.
"இதுதான் தமிழ்நாட்டில் பிரபலமான
தனியார் பள்ளி!" என்றார் சம்புலிங்கம்.
அடுத்ததாக காவலர்கள் கண்காணிப்பு மிகுந்த
பகுதியில் ஆட்டோவை சம்புலிங்கம் ஓட்டிச் சென்ற போது, வெள்ளை வேட்டியும், வெள்ளைச்
சட்டையும் அணிந்த பலர் தூக்கி வீசப்பட,
"இது என்ன இடம் என்று கேட்டார்?"
வெளிநாட்டுப் பயணி.
"சட்டப்பேரவை!" என்றார் சம்புலிங்கம்.
*****
No comments:
Post a Comment