இறுதி யாத்திரை
செத்தா தூக்குறதுக்கு
நாலு பேர் வேணும் என்ற
நினைப்பிலே வாழ்ந்த தாத்தா
மயானத்திற்குச்
சென்று கொண்டு இருக்கிறார்
யாரும் தூக்க அவசியம் இல்லாத
சவ அடக்க ஊர்தியில்!
*****
தலைமுறை விநியோகம்
பிள்ளைகளோடு
வசவாகவும்,
பேரன்களோடு
இசைவாகவும்
அப்பாக்களால் மட்டுமே முடியும்
அக்கறையை
இருவேறு தலைமுறைகளுக்கு
இருவேறு விதமாய்க் கொடுக்க!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment