மூன்றாம் உலகப் போருக்கான முதல் துப்பாக்கிச்
சூடு!
நமது
காவிரி டெல்டா பகுதிகள் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி போல் மாறி விட்டன. துப்பாக்கிச்சூடுகள்
நடக்க ஆரம்பித்து விட்டன. தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில், நிலத்திற்கு
தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான பிரச்சனையில் ஒருவர் துப்பாக்கியை எடுத்துச் சுட்டு
இருக்கிறார்.
அமெரிக்காவின்
துப்பாக்கி கலாச்சாரம் இங்கும் பரவி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
துப்பாக்கியை
எடுத்து சுடும் அளவிற்கு நிலைமை தீவிரமாகியுள்ள நிலையில் அதை இன்னும் சப்பாத்திச் சுடும்
நிலைமையில் வைத்து மதிப்பிடுவது நல்லதல்ல. காவிரி தண்ணிக்கு எதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.
டாஸ்மாக்
தண்ணியை புல் சப்ளையில் பரமாரிப்பவர்கள் நினைத்தால் காவிரி தண்ணிக்கு எதாவது செய்ய
முடியும்.
இங்கு
வாடிய பயிர்களைக் காண முடிகிறதே தவிர, வாடிய குடிமகன்களைக் காண முடியவில்லை. அந்த அளவுக்கு
போதையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
தண்ணீருக்காக
மூன்றாம் உலகப் போர் ஏற்படும் என்று அறிஞர்கள் எச்சரித்துள்ள நிலையில் அதற்கான முதல்
துப்பாக்கிச் சத்தம் கேட்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
மேலே
உள்ளவர்கள் நினைத்தால் துப்பாக்கி முனையில் பூக்களையும் பூக்கச் செய்ய முடியும். குண்டுகளையும்
வெடிக்கச் செய்ய முடியும். அவர்கள் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே
வெளிச்சம்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment