15 May 2017

கலிகாலக் கவிதைகள்


கலிகாலக் கவிதைகள்
அரிச்சந்திரன்
ரசித்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்
பொய்க்கால் குதிரை ஆட்டத்தை.

எப்படியும்
பல பேக் ஐடிகளிலிருந்து
தன்னைக் கண்டுபிடித்து விடுவாள் என்று
உறுதியாக நம்பிக் கொண்டு இருக்கிறான்
நளன்.

ஏவுகணையைச் செலுத்தி விட்டு
ஜெட் விமானத்தில் வர
இவ்வளவு நேரமா?
நொந்து கொண்டாள் சீதா.

புரோட்டாவுக்கு
மண் சுமந்து கொண்டிருந்தான்
நியூட்ரினோ பணிமனை தோண்டலில்
சிவன்.

கூலிப்படைகள் துரத்த
பிரம்மாஸ்திரத்தைத் தூக்கிக் கொண்டு
ஓடிக் கொண்டு இருந்தான் அர்ஜூனன்.

இவைகளையெல்லாம் பார்த்துச் சிரித்தபடியே
கலிகாலம் தொடங்கி விட்டதை அறிவித்து
மீம்ஸ் போட்டுக் கொண்டிருந்தார்
கிருஷ்ண பரமாத்மா.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...