17 Apr 2017

தாய்நாட்டின் விதிகள்


தாய்நாட்டின் விதிகள்
பிள்ளை
பெற்றுத் தருபவள்
பொம்பளைப் பிள்ளைகளை மட்டும்
பெற்றுத் தரக் கூடாது.

அவரவர் சாதிக்குள்
அவரவர்
காதலித்துக் கொள்ளலாம்.

அடி வாங்கினாலும்
நடத்தைக் கெட்டவள் என
ஏசப்பட்டாலும்
வெளியில் சொல்லக் கூடாது
குடும்பம் நடத்துபவள்.

வேலைக்குப் போகலாம்
அவன்
சுதந்திரமாக,
ஏ.டி.எம்.கார்டை மட்டும்
கொடுத்து விட்டு.

நல்ல நாள்
விசேச நாளில்
உரிமையுண்டு
டி.வி.பார்க்கவும்,
பலகாரங்கள் செய்யவும்
விருப்பமான ஒரு புடவையைத்
தேர்வு செய்து வாங்கிக் கொள்ளவும்.
*****

No comments:

Post a Comment