விழிப்புணர்வு
"பார்த்த உடன் பறந்து விடும் பறவைக்கு
இருப்பதுதானே விழிப்புணர்வு?" என்று கேட்ட சீடனுக்குச் சொன்னார் குரு,
"பறப்பதற்குள் பார்ப்பதுதான் விழிப்புணர்வு"
*****
நினைவுகளின் ஆட்டம்
தாவணியில் பார்த்த மகள் ஒரு புறம் சின்ன
வயது அக்காவைப் போல் காட்டி, மறுபுறம் அம்மாவை நினைவூட்டிப் போனாள்.
*****
உயிர்ப்பு
தோற்றம், மறைவு எழுதப்பட்ட சமாதியில் அதன் உயிர்ப்பைச் சொல்வது
போல தினந்தோறும் தோன்றி எரிந்து கொண்டிருக்கிறது தீபம்.
*****
No comments:
Post a Comment