அறிவிப்பு
இழுத்து
தள்ளி விட்டு அரக்கப் பரக்க ஓடி வந்து பேருந்தில் இடம் போட்ட பிறகு நடத்துநர் சொன்னார்,
"பஸ் ரிப்பேர். செட்டுக்குப் போகுது. எல்லாரும் இறங்குங்க!"
*****
வாயைக்
கொடுக்காதே!
"வாயைக்
கொடுத்து மாட்டிக்காதேடா!" என்றாள் அம்மா வெளிநாடு செல்லும், தமிழ் மட்டுமே அறிந்த தன் மகனிடம்.
*****
மறதி
தன்
வீட்டு விலாசத்தை டைப் செய்து டிராப்ட்டில் போட்டுக் கொண்டார் சபரிநாதன்.
*****
No comments:
Post a Comment