14 Feb 2017

ஊர்தி

கதவு
"வீட்டைத் திறந்து வெச்சுட்டு வெளியில போகாத!" அம்மா திட்டியது நினைவுக்கு வந்ததும் வரைந்த வீட்டில் திறந்திருந்த கதவை, மூடி வரைந்தாள் அபர்ணா!
*****
ஊர்தி
பாதி வழியில் ஆக்சிடெண்ட் ஆகி நின்றது அமரர் ஊர்தி!
*****
அக்கறை
"புள்ளைங்க உயிருக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா, நாளைக்கு யார் பதில் சொல்றது?" அக்கறையாக ஆம்புலன்ஸில் வைத்து பிள்ளைகளைக் கடத்துவது என்று முடிவெடுத்தான் பக்கிரி!
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...