மலரானவள்
"செடியில்
வாடும் பூக்கள்
உன் கூந்தலில்
மீண்டும்
மீண்டும்
மலர்கின்றன!
அந்த
மலரில்
உயிர்த்தெழுகிறேன்
நான்!"
என்றால்
சிரிக்கிறாய்
நீ,
உதட்டில்
ஆயிரம் மலர்கள்
மலர்ந்ததைப்
போல!
*****
உலகம்
கையில்
பிடித்த வானம்
பூமிக்குள்
அடங்காதது!
கையில்
அள்ளிய கடல்
வானிலிருந்து
பிழிந்தது!
உள்ளங்கைக்குள்
இருக்கும்
உலகம்
ஒருவரும்
அறியாதது!
*****
No comments:
Post a Comment