13 Apr 2026

குறுந்தத்துவக் குறிப்புகள்!

குறுந்தத்துவக் குறிப்புகள்!

செயற்றை நுண்ணறிவை விட இயற்கை நுண்ணறிவு மேலானதா?

நிச்சயமாக. எப்படி என்கிறீர்களா? முதலீடுகளை விழுங்கியபடி லாபம் ஈட்ட போராடிக் கொண்டிருக்கிறது செயற்கை நுண்ணறிவு. எந்தவித முதலீடும் இல்லாமல் லாபத்தை அள்ளித் தந்தபடி முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது இயற்கை நுண்ணறிவு. அது எப்படி என்கிறீர்களா? செயற்றை நுண்ணறிவில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று மனிதர்களின் இயற்கை நுண்ணறிவு தூண்டி விட அதை நம்பித்தானே செயற்கை நுண்ணறிவை நோக்கி முதலீடுகள் குவிகின்றன. ஆக எப்படிப் பார்த்தாலும் மனிதர்களின் இயற்கை நுண்ணறிவைச் செயற்கை நுண்ணறிவு ஒரு போதும் முந்த முடியாது.

*****

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டா?

உண்டு.

தீர்வே இல்லாத பிரச்சனைக்கு எப்படித் தீர்வு உள்ளது என்று சொல்ல முடியும்?

ஒரு பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்பதும் ஒரு தீர்வே.

*****

ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காமல் சேர்ந்திருக்க முடியாதா?

ஏன் முடியாது?!

முன்பு அதற்குப் பெயர் கூட்டுக் குடும்பம்.

இன்று அரசியலில் அதற்குப் பெயர் கூட்டணி. நிரந்தர எதிரிகளும் கூடியிருக்கும் அற்புத இடம் அது.

*****

வீட்டுமுறைச் சாப்பாடு என எழுதப்பட்டிருக்கும் ஓட்டலைப் பார்க்கும் போது மனதின் குரல் எப்படிப் பேசும் தெரியுமா?

“வீட்டுச் சாப்பாடு பிடிக்காமல்தான் இங்கே வந்தேன். இங்கேயுமாடா?!”

*****

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு எப்போது கிடைக்கும்?

அவர் அமைதியாக இருக்கும் போது!

*****

No comments:

Post a Comment