ஒரு கிலோ வாங்கினால் ஒரு கிலோ ஏமாற்றம் இலவசம்!
தெருவில்
ஒரு டெம்போ வேன் அலறிக்கொண்டு வந்தது. உள்ளே கொய்யாப்பழங்கள்.
ஒரு
கிலோ நூறு ரூபாயாம். கூடவே ஒரு கிலோ இலவசமாம்.
இந்த
இலவசம் என்ற சொல்லைக் கேட்டதுமே, நம் ஊர் மக்களுக்கு மூளையில் இருக்கும் லாஜிக் செல்கள்
தற்காலிகமாகச் செயலிழந்துவிடும் என்பது அந்த வியாபாரிக்குத் தெரிந்திருந்தது.
கூட்டத்தைப்
பிளந்து கொண்டு உள்ளே சென்றான் பஞ்சநாதன். பழங்கள் அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டு,
பெட்டிகள் எல்லாம் பாரிஸ் நகரத்து வாசனைத் திரவிய டப்பாக்கள் போலப் பளபளவென மின்னின.
ஒண்ணு
திறந்து காட்டுப்பா, என்றான் பஞ்சநாதன்.
வியாபாரி
ஒரு தத்துவஞானியைப் போலப் பார்த்தார். பெட்டியைப் பிரிச்சா நீங்கதான் வாங்கணும் சாமி,
என்றார். இது குழந்தையைப் பெத்தா நீங்கதான் வளர்க்கணும் என்பது போன்ற ஒரு தார்மீகக்
கட்டளை.
பஞ்சநாதன்
வீம்புக்குச் சம்மதித்தான்.
பெட்டியைத்
திறந்தார் வியாபாரி.
உள்ளே
இருந்த கொய்யாப்பழங்கள் ஒவ்வொன்றும் மஞ்சள் வைரங்கள் போல மின்னின. எடுத்துச் சுவைத்தான்
பஞ்சநாதன். தேவாமிர்தம்!
இரண்டு
கிலோ, அதாவது நிஜத்தில் ஒரு கிலோவுக்கு ஒரு கிலோ இலவசம் என்பதால், நான்கு கிலோ வாங்கிக்
கொண்டு வீடு திரும்பினான்.
வீட்டுக்கு
வந்து பெட்டியைத் தோண்டியபோதுதான் புரிந்தது, அந்த வியாபாரி ஒரு சிறந்த லேயரிங் கலைஞர்
என்று.
மேலே
இருந்த கொய்யாப்பழங்கள் ஆரோக்கியமாக, ஜிம்முக்குச் சென்ற உடற்கட்டோடு இருந்தன.
அடியில்
இருந்தவை எல்லாம் தற்கொலை செய்துகொண்டவை போல அழுகி, நசுங்கி, கூழாகிக் கிடந்தன.
கடைசியில்
எடையைப் போட்டுப் பார்த்தால், அந்தப் பெட்டிக்கும் லேபிளுக்கும் தான் அதிக விலை கொடுத்திருப்பது
தெரிந்தது.
ஒரு
கிலோ என்று அவர்கள் சொன்னதில் கால் கிலோ என்பது வெறும் பேக்கிங் மற்றும் அந்த வியாபாரியின்
புத்திசாலித்தனமானப் பொய். ஒரு கிலோவுக்கு எஞ்சியது முக்கால் கிலோதான்.
ஒரு
பெட்டி அழகாக இருக்கிறது என்பதற்காக அதை நம்பிவிடாதீர்கள். மேக்கப் கலை கொய்யாப்பழப்
பெட்டிகளுக்கும் வந்துவிட்டது. அடியில் இருப்பதை ஆராயாமல் பொருளை வாங்குவது, புகைப்படத்தை
மட்டும் பார்த்துவிட்டு மாப்பிள்ளை அல்லது பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்குச் சமம்!
*****

No comments:
Post a Comment