21 Mar 2026

ஆபரேஷன் ஈரான் – ஒரு ரத்த சரித்திரம்!

ஆபரேஷன் ஈரான் – ஒரு ரத்த சரித்திரம்!

2026, பிப்ரவரி 28 இல் ஈரான் உச்ச தலைவர் சையத் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். கூடவே 160 பள்ளிச் சிறுமிகள் பலி. 1,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள். அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஆடிய இந்த ஆட்டம், ஒரு நியாயமற்ற திடீர் போர். ஆனால் ஈரான் சும்மா இருக்குமா? பதிலுக்கு அமெரிக்காவின் ஜி.சி.சி தளங்களை, அதாகப்பட்டது வளைகுடா ஒத்துழைப்பு கௌன்சிலின் தளங்களை நோக்கி ஏவுகணைகளைத் திருப்பிவிட்டது.

விளைவு? ஹோர்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டது. உலக எரிசக்தி சந்தையில் ஒரு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு விட்டது.

இந்தப் போரில் ஈரானின் போர்த் திறனைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனென்றால் ஈரானின் த்ரி போல்ட் அட்டாக் அப்படி இருக்கிறது.

ஈரான் வைத்திருப்பது பழைய வில், அம்பு அல்ல. பக்கா ஸ்ட்ரேட்டஜிக் ப்ளான்.

தலைமையைத் தாக்கினால் இயக்கம் நின்றுவிடும் என அமெரிக்கா நினைத்தது. ஆனால் ஈரான் தனது அதிகாரத்தை 30 தன்னாட்சி மையங்களாகப் பிரித்துவிட்டது. கட் பண்ணா வளரும் ரகம். இது ஈரானின் பர்ஸ்ட் போல்ட்.

பஹ்ரைன், கத்தார், குவைத், ஓமன் என அமெரிக்கப் படைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஈரானின் குறி தப்பவில்லை. இது அதன் செகண்ட் போல்ட்.

உலக கச்சா எண்ணெய் புழக்கத்தில் 20% இந்த 33 மைல் அகல ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் போகிறது. போர் தொடங்கிய 11 ஆவது நாள், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலரைத் தாண்டியது. அதாவது, 40% விலை உயர்வு. இது ஈரான் எதிர்பார்த்து சொல்லி அடித்த தேர்ட் போல்ட்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இப்போது தலைவலி. ஒரு பக்கம் ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற வேண்டும் என்கிற ஆசை. இன்னொரு பக்கம், எகிறும் விலைவாசியால் கதறும் வளைகுடா நாடுகள். ஈரான் கிட்ட ஒண்ணுமே இல்லை, ஹோர்முஸ் நீர்ச்சந்தியை நாங்களே எடுத்துக் கொள்ள இருக்கிறோம் என ட்ரம்ப் சிபிஎஸ் பேட்டியில் விடப்போக, நிலைமை இன்னும் மோசமானது.

அமெரிக்காவின் மிட் டெர்ம் தேர்தல்கள் வேறு நெருங்குகின்றன. போருக்கு ஆன செலவு முதல் வாரத்திலேயே 11 பில்லியன் டாலர். இந்த ப்ராஃபிட் அண்ட் லாஸ் கணக்கில் அமெரிக்காவுக்கு இப்போதைக்கு லாஸ் தான். உலக நாடுகளுக்கு விலைவாசியில் பேரிடி.

இந்த விவகாரத்தில் இந்தியா கொஞ்சம் சறுக்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம், போர் தொடங்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றது.

இரண்டாவது காரணம், ஈரான் தலைவர் கொல்லப்பட்டபோது இந்தியா மௌனம் காத்தது.

மூன்றாவது காரணம், நியூட்ரல் என்கிற பெயரில் ஒரு பழைய கூட்டாளியைத் தவிக்க விட்டது.

ஈரான் இப்போது எக்ஸிஸ்டென்ஷியல் வார் ஆடிக்கொண்டிருக்கிறது. அதாவது வாழ்வா சாவா போராட்டம். ரஷ்யாவும் சீனாவும் வேடிக்கை பார்த்தபடி மெல்ல காய் நகர்த்துகின்றன.

டிரம்புக்கு வேறு வழியில்லை. எந்த ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தடா போட்டாரோ, அதே ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு படா வாய்ப்பைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

அமெரிக்கா உக்கிரமாகச் சண்டை போட்டு டாலரைத் தேய்க்கட்டும், யுவான் ஆட்டமேட்டிக்காக உயரட்டும் என்று காத்திருக்கிறது சீனா.

மொத்தத்தில் அமெரிக்கா நினைத்தது போல இது ஒரு சின்ன சர்ஜிக்கல் ஸ்டிரைக் அல்ல. இது ஒரு சிஸ்டம்ஸ் வார். ஈரான் ஏணியின் உச்சாணிக் கிளையில் உட்கார்ந்துகொண்டு ஆட்டத்தை மாற்றியமைக்கிறது. குளோபல் சவுத் நாடுகளுக்கு ஈரான் இப்போது ஒரு ரியல் டைம் பாடம்.

இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பாடம். அதென்ன பாடம் என்கிறீர்களா? எங்கோ வளைகுடாவில் சண்டை நடந்தால் இந்திய அடுப்பறைகளில் பூனை படுத்துறங்கும் என்பதுதான். சிலிண்டர் இல்லையென்றால், அடுப்பில் உப்புமா லேது?

*****

No comments:

Post a Comment