13 Feb 2026

மீண்டும் மீண்டும் மரணம்! என்ன செய்யப் போகிறார் விஜய்?

மீண்டும் மீண்டும் மரணம்! என்ன செய்யப் போகிறார் விஜய்?

சேலம் சீலநாயக்கன்பட்டி. வெயில் மண்டையைப் பிளக்கிறது. ஒரு பக்கம் தளபதி கோஷம், இன்னொரு பக்கம் ட்ரோன்களின் ரீங்காரம். தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருவர் செத்துப்போயிருக்கிறார். கரூர் சம்பவத்தின் ஈரம் காய்வதற்கு முன்பாக சேலத்தில் அடுத்தச் சம்பவம்.

விஜய்யின் தவெக கூட்டங்களுக்குக் காவல்துறை 51 நிபந்தனைகள் போட்டிருந்தது. அதில் 52 ஆவது நிபந்தனையாக யாரும் சாகக்கூடாது என்று போட்டிருக்கலாம். ஆனால், மரணம் எந்த பெர்மிஷனும் கேட்பதில்லை.

இன்று ஒரே நாளில் ஒரு பக்கம் மகளிர் உரிமைத் தொகை கணக்கில் ஏறுகிறது. இன்னொரு பக்கம் ஓர் ஏழைத் தொண்டனின் உயிர் கணக்கில் வராமல் காற்றில் கரைகிறது.

விஜய் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், அந்த அரசியலுக்காகக் கூடும் கூட்டத்தில் ஓர் உயிர் போவது, அந்தத் தலைவனுக்குத் தான் தர்மசங்கடம்.

இந்த மரணத்தை மாரடைப்பு என்கிறார்கள். ஆனால் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், அரசியலில் மாரடைப்பு தொண்டனுக்குத்தான், தலைவருக்கு இல்லை.

இப்படியே போனால் டிவிகே என்பது தமிழக வெற்றிக் கழகமா? தமிழக விபத்துக் கழகமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்து விடும்.

மாஸில் மரண மாஸ் என்பது போல, கூட்டத்தில் இது மரணக் கூட்டமோ என்னவோ!

எப்போதுதான் நிற்கப் போகிறது இது போன்ற உயிர் எடுக்கும் அரசியல் கூட்டங்கள்?

அரசியலுக்கு வருவோர் முதலில் தங்கள் பதவி நாட்டங்களைக் குறைத்துக் கொண்டு, அரசியல் கூட்டங்களைக் கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

*****

No comments:

Post a Comment