மிஸ்டர்
டென்சன் அன்ட் மிலிட்டரி மேனேஜர்!
ஒரு
குறுங்கதை
முதலில்
மேனேஜருக்கு போன் செய்தேன். மனிதர் பிஸி. யாரிடம் அத்தனை நேரம் கடலை போடுகிறார் என்று
தெரியவில்லை. இது முதல் அடி. அடுத்து, அவர் எழுதச் சொன்ன சாப்ட்வேர். அதற்காக அவர்
சொன்னதையெல்லாம் டவுன்லோட் பண்ணப்போய் அது கொடுத்த டெக்னிக்கல் சொதப்பல்கள் இரண்டாவது
அடி. மனசு அப்படியே ஹேங் ஆகிவிட்டது. மேனேஜர் இன்னும் பாதிக் கடலையைத் தின்று முடிக்கவில்லை.
இங்கே வேலை அந்தரத்தில் தொங்குகிறது. நாளை வேலை முடியவில்லை என்றால் என்னிடமும் கடலை
போட மாட்டார். கல்லைத் தூக்கித் தலையில் போடுவார்.
இதற்கு
மேல் இந்தக் கம்ப்யூட்டரோடு மாரடிப்பது சரிபட்டு வராது என்று வெளியே வந்தேன். வெளியில்
சுவாரசியங்கள், அசுவாரசியங்கள் எல்லாம் அதிகம். நான் ஸ்டாப்பாகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள்.
இது போன்ற நேரங்களில் அது ஒரு நல்ல ரிலாக்சேசன். லாஜிக் பார்த்தால் அது டிப்ரஷன். அதனால்
நோ லாஜிக்.
அப்படி
ஒரு நான் ஸ்டாப் பேச்சு வாமிட்டிங் ஓடிக் கொண்டிருந்தது.
எப்படியோ
இந்த நகரத்தில் தப்பிப் பிழைத்து ஓரத்தில் ஒண்டிக் கொண்டிருந்த அந்த வேப்பமரத்தடியில்
மாநாடு கூடியிருந்தது.
அவர்,
காந்தியைச் சுட்டது சரி என்றார். ஜனநாயகம் வேஸ்ட், மிலிட்டரி ஆட்சிதான் பெஸ்ட் என்றார்.
தெருக்கோடியில் ஒரு நாய் குரைத்தால் கூட அதற்குச் சேர்மேன்தான் காரணம் என்றார். வேடிக்கை
என்னவென்றால், சுற்றியிருந்தவர்கள் ஆமாம் சாமி போட்டுச் சிரித்தார்கள். அந்த மனிதரை
அவர்கள் அவ்வளவு அழகாக டீகோடு செய்து வைத்திருக்கிறார்கள். அங்கே போனதற்கு நானும் சும்மா
இருக்கக் கூடாது, ஒரு பின்னணி இசையை ப்ளே பண்ணி விட்டு வந்தேன். அது ஜால்ரா.
எனக்கென்னவோ
எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதுதான் நிம்மதி என்று தோன்றியது. எதுவும் தானாக மாறும்.
ஈகோவை மூட்டை கட்டி வைப்பது உடம்புக்கு நல்லது.
இதற்கிடையே
ஓனர் அவராகவே லைனில் வந்தார். போனை வைத்து விட்டு வந்திருக்க வேண்டும். தப்பு செய்து
விட்டேன். வேலை முடிந்ததா என்றார்.
மேனேஜர்
கடலைப் போட்டுக் கொண்டு இருக்கிறார் என்று சொல்ல முடியாது. மேனேஜரிடம் கலந்து பேசிட்டுச்
சொல்றேன் என்றேன். இது உலக மகா தப்பித்தல் சூத்திரம். எனக்குத் தெரியாது, புரியலை என்ற
இந்த இரண்டு வார்த்தைகளும் தரும் நிம்மதி தனி. அதை இப்போதைக்கு ஓனரிடம் சொல்ல முடியாது.
சீட்டைக் கிழித்து விடுவார். அதனால் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் டிரை பண்ணிப் பார்த்துக்
கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
எனக்கு
ஒரு கருத்தைச் சொன்னால், அதில் ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அது என் கழுத்தை நெரிக்கிறது. சுற்றியிருப்பவர்கள் செம கேஷுவலாக எதையாவது உளறிவிட்டுப்
போவார்கள். ஆனால், என்னை மட்டும் பொறுப்பானவன் என்ற கூண்டுக்குள் ஏற்றி வேடிக்கை பார்ப்பார்கள்.
அதனால் இந்த முறை பட்டும் படாமல் ஒரு பதில் ஓனருக்கு.
உண்மையில்,
நான் எதையாவது சொல்லி அடுத்தவர் மனதைக் காயப்படுத்துவதை விட, அவர் என்ன சொல்கிறார்
என்று வெயிட் பண்ணிக் கேட்பது புத்திசாலித்தனம். அவருக்கு ஓர் ஆத்மதிருப்தி, எனக்கு
ஒரு டென்ஷன் ஃப்ரீ லைஃப்.
உலகத்தில்
இதுவரை சொல்லப்பட்ட அட்வைஸ்களே போதும், மக்கள் திருந்துவதற்கு. ஆனால் யாரும் திருந்தமாட்டார்கள்.
ஒவ்வொரு
மனுஷனுக்கும் ஓர் ஆதார சுருதி உண்டு. அவன் மனசு அந்த ஃப்ரீக்வென்சியில்தான் வேலை செய்யும்.
கருத்துச் சொல்லியோ, கம்பு எடுத்தோ அதை மாற்றிவிட முடியாது. அந்தச் சுருதி எங்கே இழுக்கிறதோ,
அங்கேதான் அவன் போவான்.
அந்த
ஆதார சுருதிக்கு எதிராக நீங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் போதும், மனுஷன் எகிறி குதிப்பான்.
எரிச்சல் படுவான். உங்களை அன்-ஃபாலோ செய்வான்.
இப்படி
யோசித்துக் கொண்டிருக்கையில், மேனேஜர் லைனுக்கு வந்தார்.
சார்
ரொம்ப நேரமா அடிச்சிக்கிட்டு இருந்தேன். ஓனர் லைனுக்கு வந்துட்டார் என்றேன்.
நான்
ரிசைன் பண்றதா முடிவு பண்ணிட்டேன் விகடபாரதி என்றார்.
ஹா
ஹா நல்ல முடிவு என்று இப்போது சிரிக்க முடியாது. ஒய் ஸார் என்ற வருத்தப்படுவது போலக்
காட்டிக் கொண்டேன்.
அது
வேண்டாம். வாட் அபௌட் யூ? என்றார்.
நீங்கள்
போய் விட்டால், நான் அடுத்த மேனேஜர் என்றா சொல்ல முடியும்.
நீங்கப்
போய் ஒரு நல்ல ப்ளேஸ்ல ஜாய்ன் பண்ணுங்க. நான் வந்து ஒட்டிக்கிறேன் என்றேன்.
எனக்குத்
தெரியும் பை விகடா என்றார்.
சட்டென்று
மாடிப்படிகளில் தாவிக் குதித்து ஏறி, குரங்கு சேட்டைகள் பண்ணியபடி அபார்ட்மென்டுக்குள்
ஓடினேன். அதுவரை பக் ஆகியிருந்த அத்தனையும் விடுபடுவது போலிருந்தது. கடகடவென்று சாப்ட்வேரை
டைப்பிக்க ஆரம்பித்தேன்.
டெபனெட்டாக
நெக்ஸ்ட் மேனேஜர், அது நான்தான்.
*****

No comments:
Post a Comment