17 Feb 2026

இன்றைய அறிவுலகமும் டிரம்பும்!

இன்றைய அறிவுலகமும் டிரம்பும்!

இன்றைய அறிவுலகம் எப்படி இருக்கிறது என்றால் …

எதற்கு வினை புரிய பண்ண வேண்டும், எதற்கு வினை புரியக் கூடாது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் சரியான அறிவு.

வாட்ஸப்பிலும், பேஸ்புக்கிலும் வரிந்து கட்டிக் கொண்டு உப்புச் சப்பில்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் சண்டை போடுபவர்கள், அக்கிரமங்களை நிஜ வாழ்வில் காணும் போது கண்டும் காணாமலும் சமாதானமாகக் கடந்து விடுகிறார்கள். இப்படித்தான் இருக்கிறது இன்றைய அறிவுலகம்.

*****

இந்தக் காலத்திலும் சோற்றுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பவர்களிடம் என்ன சொல்வது …

அரசாங்கம் இலவச அரிசிக்குப் பதிலாக இலவச சோறு கொடுத்திருக்க வேண்டும்.

*****

உலக நாடுகள் அனைத்துக்கும் எதிராகச் சாட்டையை முறுக்கும் டிரம்புக்கும் சாட்டைக்குள் உள்ள தொடர்பு என்னவென்றால் …

டிரம்ப் வித்தியாசமானவர். ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்பதற்காக இந்தியாவுக்கு வரி விதிப்பார். இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியத்தை வாங்கக் கூடாது என்று சொல்லி விட்டு அவர் மட்டும் இஷ்டத்துக்கு ரஷ்யாவிடமிருந்து யுரேனியத்தைப் பேக்கப் செய்து கொண்டிருப்பார். இந்தியா பாகிஸ்தான் போரை வர்த்தக ஒப்பந்தத்தைக் காட்டி நிறுத்துவார். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்தால் ஆயுத ஒப்பந்தங்களைப் போட்டு பணத்தைக் குவித்துக் கொள்வார். அவர் அனுமதியில்லாமல் எந்த நாடும் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கக் கூடாது என்பார். அப்படியே தொடுத்தாலும் தன் முன்னே வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சாட்டையைச் சுழற்றுவார். ஆனால், ஈரான் மேல் அவர் தொடுத்த தாக்குதலுக்கு என்ன செய்வார்? இப்போது வெனிசுலாவின் மீது அத்துமீறியதற்கு என்ன செய்வார்? தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்வாரா? அல்லது உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் சாட்டையால் அடிப்பாரா? அவர் கையில் இருக்கும் சாட்டையானது எம்ஜியாரின் ‘நான் ஆணை இட்டால்…’ என்பது போலவும் சுழலும், கழைக்கூத்தாடியின் கையில் இருக்கும் சாட்டையைப் போலவும் சுழலும். அது எப்போது எப்படிச் சுழலும் என்பது சமயத்துக்குத் தகுந்தாற் போல டிரம்மை அடிக்கும் டிரம்புக்கே வெளிச்சம்.

*****

No comments:

Post a Comment