17 Feb 2026

அன்எடிட்டபிள் மனங்களின் டெசிபல்

அன்எடிட்டபிள் மனங்களின் டெசிபல்

வாழ்க்கை என்பது ஒரு லைவ் டெலிகாஸ்ட். நடக்கும்போது எடிட் செய்ய முடியாது. கேமராவுக்குப் பின்னால் இருந்து பார்த்தால் எல்லாம் மொண்ணையாகத்தான் இருக்கும். ஆனால், எல்லாம் முடிந்து ஒரு டாக்குமெண்டரியாகப் போட்டுப் பார்த்தால், அடடா என்ன ஒரு திரைக்கதை!

அதனால்தான் சொல்கிறேன், நிகழ்வுகளின் இடையில் சுவாரசியத்தைத் தேடாதீர்கள். உப்பு போடாத பருப்பு மாதிரி சில சமயம் வாழ்க்கை சப்பென்றுதான் இருக்கும். அதற்காக அதில் தேவையில்லாத மசாலாக்களைச் சேர்த்து விபரீதம் ஆக்கிவிடாதீர்கள். என்ட் கார்டு போடும்போது கதை தானாகவே மாஸாக மாறும்.

இங்கே யார் நல்லவன், யார் கெட்டவன்? இது ஒரு ரிலேடிவ் தியரி. அவரவர் பார்வைக்கேற்ப நல்லவனும் கெட்டவனும் மாறிக் கொண்டே இருப்பான். ஆகவே மற்றவர்கள் சொல்லும் கெட்டவன் பற்றி ஓவர் திங்கிங் வேண்டாம். அவர்கள் சொல்லும் வகையில் நல்லவனாக இருந்து நாசமாய்ப் போவதை விட, அவர்கள் பார்வையில் நீங்கள் கெட்டவனாக இருந்து நிம்மதியாக வாழ முடியும் என்றால் யோசிக்காதீர்கள், அப்படியே வாழுங்கள்.

இந்த உலகம் உங்களை யூஸ் பண்ணிக்கொள்ளத் துடிக்கும். நீ எனக்கு உதவவில்லை என்றாலும் பரவாயில்லை, நான் உன்னை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த சமூகத்தின் அல்காரிதம். ஆக, அவர்களுக்கு ஒரு ஜஸ்டிஸ், உங்களுக்கு ஒரு ஜஸ்டிஸ். தட்ஸ் ஆல்! இதைப் புரிந்து கொள்ளுங்கள். இதற்காக யாரிடமும் போய் சூப்பர் சுப்பராயன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்காதீர்கள்.

பொதுவாக மனிதர்களை நம்புவது என்பது ஒரு பக் நிறைந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வது போன்றது. இதில் நம்பிக்கைத் துரோகம் என்று எதுவும் இல்லை, அந்த சாஃப்ட்வேரின் டிசைனே அப்படி! ஒவ்வொரு மனதும் ஒரு யுனிக் கோட்.

சில நேரங்களில் மனம் நினைக்கிறது, நான் சிந்திப்பது போலவேதான் அவனும் சிந்திப்பான் என்று. இது உலக மகா எர்ரர். இங்கேதான் லாஜிக் இடிக்கிறது. உங்கள் மனதின் ஃபிரீக்வென்சி வேறு, அடுத்தவன் மனதின் ஃப்ரீக்வென்சி வேறு.

ஒவ்வொரு மனதுக்குள்ளும் கொஞ்சம் வெறுப்பு, கொஞ்சம் விரோதம், ஏகப்பட்ட ஏமாற்றங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு டைம் பாம் மாதிரி. வெடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும். இன்னொரு மனம் அதற்கு ஒரு சிறு தீக்குச்சியை நீட்டினால் போதும். டமால்! அந்த இன்னொரு மனமாக உங்கள் மனம் இருந்து விடக் கூடாது.

கடைசியாக ஒன்று, எந்த மனதுக்கும் கன்ட்ரோல் பிடிக்காது. நீங்கள் ஒரு வேலி போட்டால், மனம் அதைத் தாண்டத் துடிக்கும். நீங்கள் ஒரு கட்டளை இட்டால், அது ஆப்போசிட் டைரக்சனில் ஓடும்.

மனம் என்பது பிடிபடாத பாதரசம். அதைக் கட்டுப்படுத்த நினைக்காதீர்கள், அவதானியுங்கள். வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும். அதுவாக ஆடி அடங்கும். ஆடும் போது வேடிக்கை பாருங்கள். உங்களுக்கே வாழ்க்கை ரொம்ப ரசமா இருக்கும். இல்லையென்றால் விசமாக இருக்கும்.

*****

No comments:

Post a Comment