7 Jan 2018

சேனல்தாசன்

சேனல்தாசன்
தலைப்புச் செய்திகளை மட்டும்
பார்த்து விட்டு
பாட்டுச் சேனலுக்கு மாறி விடுவதும்,
பிரேக்கிங் செய்திகளை மட்டும்
பார்த்து விட்டு
காமெடிச் சேனலுக்கு மாறி விடுவதும்
அனிச்சைச் செயலாய்
தனக்கு மட்டுந்தான் அப்படியா?
எல்லாருக்கும் அப்படியா?
என்ற சந்தேகம் அவனுக்கு.
எதேச்சையாய்ச் சந்தித்த மனிதர் ஒருவர்
பாட்டுச் சேனலுக்கு இடையில்
தலைப்புச் செய்திகள் பார்ப்பதும்,
காமெடிச் சேனலுக்கு இடையில்
பிரேக்கிங் நியூஸ் பார்ப்பதையும்
சொன்னதைக் கேட்ட பின்
தான் தலைகீழாய் இருப்பதை உணர்ந்த அவன்
சினிமா நாயகர்களுக்கு வாக்களிப்பதால்தான்
இப்படி நேர்கிறது என்று தீர்மானித்தவனாய்
இப்போதெல்லாம்
செய்திச் சேனல்களையும்
சினிமா சேனல்களையும்
தனித்தனியே பிரித்து வைத்துக் கொள்கிறான்
சினிமா சேனல்களில் அரசியல் காட்சிகள் வந்தால்
நிறுத்தி விடுவதும்
செய்திச் சேனல்களில் சினிமா செய்திகள் வந்தால்
நிறுத்தி விடுவதும்
அனிச்சைச் செயலாய் ஆகி விட்ட அவனுக்கு
சில நாட்களாய்
சோட்டா பீம் பார்ப்பதில்
அலாதி பிரியம் உண்டாகி விட்டது.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...