7 Jan 2018

பின்நவீனத்துவ மனிதனின் பிரச்சனைகள்

பின்நவீனத்துவ மனிதனின் பிரச்சனைகள்
            இன்றைய பின்நவீனத்துவ மனிதர்களுக்குப் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் வடிவத்தில் ஏமாற்றம், ஆதங்கம், நிராசை என்ற பல இருக்கின்றன. அப்படி சில பிரச்சனைகள் என்னவென்றால்...
            1. நிலம் வாங்குவதில் இறங்குவது - அதில் நன்றாகவே சிக்கிக் கொண்டு பொருளாதார நட்டம் அடைவது. சிலரை நம்பி காரியத்தில் இறங்கக் கூடாது என்பதை பின்நவீனத்துவ மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்பின் காரணமாக எந்தக் காரியத்திலும் யாரை நம்பியும் இறங்கி விடக் கூடாது. காரியத்தைச் சாதிக்கக் கூடிய ஆற்றல் யாரிடம் இருக்கிறதோ அவர்களை நம்பித்தான் காரியத்தில் இறங்க வேண்டும். பின்நவீனத்துவவாதிகளிடம் இந்த குணம் ரொம்பவே குறைச்சல்.
            2. ………… இல்லாமல் ………  ஈடுபடுவது. ……….  என்பது உணர்ச்சிகரமானது. அதில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது புதிரானது. அதில் தைரியமாக நினைத்ததைச் சாதித்து விடலாம் என்று இறங்குவது இருக்கிறதே, அது மாபெரும் முட்டாள்தனம். சின்ன ஆசைகளுக்கு இடம் கொடுப்பது பெரிய துன்பத்தைக் கொண்டு தரும் என்பதற்கு இதுவே சரியான உதாரணம். இதில் செய்வதையும் செய்து விட்டு பிரேக் அப்போ அல்லது விவாகரத்தோ கொடு விண்ணப்பித்து நிற்பது.
            3. ஒரு சிலரின் எண்களை ப்ளாக் செய்து வைத்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு சின்ன அழைப்பின் மூலம் சிறிய உதவியைச் செய்து பெரிய வேலையை வாங்கி விடுகிறார்கள். அவர்கள் மூலம் ஏதேனும் உதவி கிடைக்கலாம் என அல்பத்தனமாக நம்பி அநியாயத்துக்குச் சிக்கிக் கொள்கிறான் இந்தப் பின்நவீனத்துவ மனிதன். தேவையா இது?
            4. நீ முடிவாகவும், இறுதியாகவும் சிந்தித்தால் உனக்கு எந்த துன்பமும் ஏற்படப் போவதில்லை. பின்நவீனத்துவ மனிதனால் இது முடியாது. அவன் எப்போதும் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் இருப்பான். குழப்பமாக இருப்பான். அவன் எங்கே ஆரம்பிப்பான், எங்கே முடிப்பான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
            5. உனக்கு எந்த வழி பிடித்திருக்கிறதோ அந்த வழியில் செல். உனக்கு எந்த வழிப் பிடிக்கவில்லையோ தயவுசெய்து அந்த வழியில் செல்லாதே. பாவம் அவன் என்ன செய்வான்? எந்த வழி பிடித்திருக்கிறது? எது பிடிக்கவில்லை என்பதே அவனுக்குத் தெரியாது. அவன் ஏதோ ஒரு வழியில் போய்க் கொண்டு இருக்கிறான். போகட்டும் போங்கள். முதலாகத் தெரிந்து கொள்வதை அவன் முடிவாக தெரிந்து கொள்ளட்டும்.
            உங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறதென்றால் சத்தியமாக நீங்கள் பின்நவீனத்துவ மனிதன்தான்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...