மகளாகிய நான் அப்பாவாகிய அவரிடம்...
பொட்டப்புள்ள
படிச்சு
என்னவாகப்
போகுது என்றார் அப்பா.
படித்ததால்தான்
படித்த பிள்ளைகள்
கஞ்சியூற்ற மறுத்த போது
ராசா போல
வைத்து
அவரைக் காப்பாற்ற
முடிந்தது.
அதற்கு கைம்மாறாகவோ
என்னவோ
பேத்திகள்
இருவரையும்
தோளிரண்டில்
சுமந்து கொண்டு
பள்ளியில்
கொண்டு விட்டு வருபவர்
பேரனை மட்டும்
ஸ்கூல் வேனிலே
போகட்டும் என்று
கண்டு கொள்ளாமல்
விட்டு விடுகிறார்.
*****
No comments:
Post a Comment