2 Apr 2017

பிரயோஜனங்கள்


எடை
எடை குறைத்துப் போடும்
ரேசன் கடைக்காரர்
மனைவி மட்டும்
குண்டு.
*****

பிரயோஜனங்கள்
ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல்
புகை கக்கி
வீட்டுக்கும், கடைத்தெரு பாலத்துக்கும்
நாளுக்கு ஏழெட்டு முறை
கேளாதோர் காதுகளையும் செவிடாக்கி
புல்லட்டில் செல்லும்
பரமதயாளன் சொல்லுவான்,
"யாருக்கு என்ன பிரயோஜனம்?" என்று
புகை கக்காமல்
பழைய சைக்கிளை
உருட்டிச் செல்லும்
மண்ணப்பனைப் பார்த்து.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...