போடா பொறுக்கி!
"எல்லா
படத்திலேர்ந்தும் கொஞ்சம் கொஞ்சம் லவ் சீன்களைச் சுட்டு இருக்கிறதால இந்த டைட்டில்
பொருத்தமா இருக்கும் சார்!" என்றார் டைரக்டர். அப்படித்தான் தேர்வானது,
"போடா பொறுக்கி!" என்ற அந்த டைட்டில்.
*****
மறதி
ஞாபகமாய்
செல்பி எடுத்துக் கொண்ட குமார், எடுத்துச் சென்ற அன்புப் பரிசைக் கொடுக்காமல் மறந்து
விட்டு வந்தான்.
*****
டிரென்ட்
அடி
வாங்கிய அரசியல்வாதி அசந்து போனார், பெருகிக் கொண்டிருந்த பப்ளிசிட்டியைப் பார்த்து.
*****
எல்லா புகழும்...
டூப்பிடம்
அடி வாங்கிய வில்லன் கடைசியில் ஹீரோவின் முன் மண்டியிட்டான்.
*****
No comments:
Post a Comment