12 Jan 2017

பெருவெடிப்பு


பெருவெடிப்பு
மேகமற்ற வானம்
விரக்தியுடன் வெடித்துக் கிடக்கும்
மணலற்ற ஆறு!
*****

வெளி அறைகள்
உடைந்த பேசின்கள்
சிதைந்த சுவர்கள்
நீர் பார்த்து எத்தனை நாள்களோ
வெளிவந்து
நாய் போல
வெளிச்சுவரில் அடிக்க
வசதியாயிருக்கின்றன
கழிவறைகள்!
*****

விளம்பரம்
எல்லாம்
ஒரு விளம்பரம்தான்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
உட்பட!
*****

No comments:

Post a Comment