12 Jan 2017

மனிதர்கள்


மனிதர்கள்
வானம் பொழிந்தாலும்
அணை நிரம்பி
வழிய வேண்டும்
தண்ணீர் திறந்து விடும்
மனிதர்களுக்கு!
*****

வரவேற்பு
ஜிம்மிக்குத் தெரிந்தது -
அது மட்டுமே
வாலாட்டும்!
நமக்குத் தெரிந்தது -
அதுக்கு மட்டுமே
பிஸ்கட் போடுவோம்!
பிறகு
பயிற்சி கொடுக்கத்
தொடங்குவோம்
வீட்டுக்கு வந்தவர்களைப் பார்த்து
குரைக்க!
*****

முடிவு
முகத்தை மறைக்கும்
அளவு
மாலைகள் போட்ட பின்
முடிந்து விடுகிறது
ஒருவனின் மரணம்!
*****

No comments:

Post a Comment