ரெமோ - சில குறிப்புகள்
ஒரு பெண்ணைக் காதலிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பெண்ணாகக் கூட மாறலாம் என்பதே ரெமோ என்ற திரைப்படம் இந்த உலகிற்குச் சொல்லும்
மாபெரும் செய்தி.
கொஞ்ச நேரம் பெண்ணாக இருப்பதே எவ்வளவு சிரமமாக இருக்கிறது, இதில் வாழ்நாள் முழுவதும் பெண்ணாக இருப்பது எவ்வளவு சிரமமானது என்ற வசனமொழிச்
செப்பும் சிவகார்த்தியகேயனின் பெண்கள் மேல் கொண்ட அக்கறை மிளிரும் படமாக இப்படம் வெளிவந்துள்ளது
பெண்கள் செய்த பாக்கியமே.
பெண்களின் சிரமத்தை உணர்ந்தே அவர் பெண்ணாக நடிக்கச் சம்மதித்திருக்க வேண்டும்.
இது ஒரு தியாக மனப்பான்மை கொண்ட நடிகரால் மட்டுமே செய்ய முடிகிற ஒரு
காரியம் ஆகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் திரைப்பட வெளியீட்டிற்காக
அவர் மேடையில் அழுதாரே, அது பெண் வேடமிட்டதால் நிகழ்ந்தது என்பதே
அவர் இந்த பெண் வேடத்தில் எவ்வளவு கரைந்து போயிருக்கிறார் என்பதைக் காட்ட மிகச் சிறந்த
சான்றாகும்.
படத்தின் இறுதியில் அவர் ஒரு முதியவர் வேடத்தையும் போடுகிறார். அது முதியவர்களின் சிரமங்களைக் காட்ட அவர் எடுத்துக் கொண்ட முயற்சியாகும்.
இந்தக் கெட்டப் முயற்சிகள் தொடரும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
அப்போதுதானே இந்த உலகில் பல தரப்பட்டவர்கள் படும் சிரமங்களை அவர் இந்த
உலகிற்குக் காட்ட முடியும்.
தமிழ் நாட்டில் சிவகார்த்திகேயனின் ரசிகைகள் அதிகம் இருப்பதால், ரெமோ கெட்டப்பில் வரும் ஆண்களைத்தான் காதலிப்பேன் என்று அவர்கள் இனி சொல்லி
விட்டால், தமிழ்நாட்டில் இருக்கும் ஆண்களின் நிலையை நினைத்தால்
கவலையாகத்தான் இருக்கிறது. அந்த ஒரு கவலையைக் கழித்து விட்டுப்
பார்த்தால், ரெமோ தமிழ்த் திரைப்பட உலகின் வேற லெவல் படமே என்பதே
எமது தாழ்மையான கருத்தாகும்!
மற்றபடி இந்தப் படத்தைப் பார்த்ததிலிருந்து எங்கள் பக்கத்து வீட்டு நர்ஸ் அக்காவைப்
பார்க்கும் போதெல்லாம் அவர் பெண்ணா? ஆணா? என்று சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. படம்
அந்த அளவுக்கு ரியாலிட்டி வகையைச் சார்ந்தது!
*****
No comments:
Post a Comment