ஓவர் திங்கிங் – நியூரான்களின் நிழல் யுத்தம்!
யோசிப்பது
நல்லது. மனிதனை மரம், செடி, கொடிகளிடமிருந்து பிரித்துக் காட்டுவதே இந்த நியூரான்களின்
மின்சாரப் பாய்ச்சல்தான்.
சிக்கல்
வரும்போது மூளையானது ஒரு சுவிட்ச் போட்ட மெக்கானிக் போல வேலை செய்ய வேண்டும்.
ஆனால்,
அந்த மெக்கானிக் வேலையை விட்டுவிட்டு, சுத்தியல், ஸ்பேனர், கோடரி, கடப்பாரையை எடுத்துக்
கொண்டு வண்டியைச் சரி செய்யாமல் மொத்தமாக உடைத்துப் போட்டு வேடிக்கை பார்த்தால், அதுதான்
ஓவர் திங்கிங். உங்கள் வண்டி எங்கும் போகாது. நீங்கள் அங்கேயேதான் இருப்பீர்கள். உங்கள்
வண்டிதான் பிரித்துப் போடப்பட்டிருக்கிறதே.
நமது
மூளை ஓர் அற்புதமான கம்ப்யூட்டர்.அதில் ஒரு சின்ன கோளாறு, அதற்கு ஸ்டாப் பட்டன் இல்லாமல்
இருப்பது.
ஒரு
சின்னப் பிரச்சினை வரும்போது, அதற்கு ஒரு தீர்வை யோசிப்பதற்குப் பதில், பத்து வருடம்
கழித்து இதே போன்ற பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று ஒரு கிளைக் கதையை உங்கள் மூளை
உருவாக்கிக் கொண்டே போனால், சத்தியமாக நீங்கள் ஓவர் திங்கிங் என்ற ஓவர் டோஸால் அவதிப்படுகிறீர்கள்.
யோசிப்பதற்கும்
மிகையாக யோசிப்பதற்கும், தட் மீன்ஸ் திங்கிங் அன்ட் ஓவர் திங்கிங்கிற்கும் உள்ள வித்தியாசம்
மிக மெல்லியது.
வண்டி
சாவி தொலைந்து விட்டால், அதைத் தேடுவதுதான் தீர்வு.
இந்நேரம்
அந்தச் சாவி யார் கையிலாவது கிடைத்து, அவர் வண்டியை எடுத்துக் கொண்டு போய் எவர் மேலாவது
மோதி இருந்தால்…, இன்றைய ராசிபலன் வேறு சரியில்லையே… போன வாரமே ஜோசியர் சொன்னாரே… என்றெல்லாம்
யோசிக்க ஆரம்பித்தால், சாரி பாஸ் நீங்கள் ஓவர் திங்கிங் எனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட
ஐசியுவில் வைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
அறிவியல்
ரீதியாகப் பார்த்தால், மூளையின் ப்ரீஃபிரண்டல் கார்டெக்ஸ் அதிகப்படியான வேலைப்பளுவைச்
சுமக்கும்போது, அது முடிவெடுக்கும் திறனை இழந்து விடுகிறது என்கிறார்கள் மூளை நரம்பியல்
ஆராய்ச்சியாளர்கள்.
அப்போது
என்னவாகும் என்கிறீர்களா? ஒருவிதமான பாராலிசிஸ் ஏற்பட்டது போல கை, கால் ஏன் ஒட்டுமொத்த
உடலும் செயலிழந்தது போல உட்கார்ந்துவிடுவீர்கள். கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கலாம்.
அனுபவிக்கும் போதுதான் அதன் வேதனையும் வலியும் புரியும்.
இதற்குத்
தீர்வுகள் இல்லையா?
ஏன்
இல்லாமல்,
ஒரு
சிக்கலைப் பற்றி யோசிக்க பத்து நிமிடம் போதும். அதற்கு மேல் போனால் அது ஆயிரம் தடவை
எழுதும் இம்போசிசன், தீர்வு அல்ல.
மூளைக்குள்
ஓடும் எண்ணங்களை ஒரு காகிதத்தில் எழுதினால், அதன் வீரியம் குறைந்துவிடும். ஸோ எழுதுங்கள்.
சில நேரங்களில் அதற்கு அலுப்புபட்டுக் கொண்டே யோசிப்பதை நிறுத்தி விடுவீர்கள். எப்படியோ
நின்றால் சரி சனியன்.
ஓவர்
திங்கிங்கால் யோசித்துக் கொண்டே இருப்பதை விட, ஒரு தவறான முடிவை எடுப்பது கூட மேல்தான்.
தப்பு நடந்தால் திருத்திக் கொள்ளலாம். யோசித்துக் கொண்டே இருந்தால் சமயங்களில் மண்டை
கழன்று போகும். ஒருவரை மண்டை கழண்ட கேஸ் என்று சொன்னால் எப்படி இருக்கும் சொல்லுங்கள்.
முடிவாக,
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அமுதத்துக்கே அந்தக் கதி என்றால், உங்கள் ஓவர்
திங்கிங்கை என்ன சொல்ல?
எனவே
யோசனைகளை நீங்கள் ஆளுங்கள். யோசனைகளை உங்களை ஆள விடாதீர்கள். ஒரு சத்தியமான உண்மை என்ன
தெரியுமா? உலகத்தில் பல போர்கள் வெறும் யோசனையாலேயே உங்கள் மனதுக்குள் நடந்து முடிந்துவிடுகின்றன.
நிஜத்தில் ஒன்றுமே நடப்பதில்லை!
இதற்கு
மேல் என்ன சொல்ல? உங்கள் ஓவர்திங்கிங்கிற்கு இன்றே என்ட் கார்ட் போடுங்கள். போனால்
போகட்டும் போடா என்று பாடுங்கள். ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி என்று ஆடுங்கள்.
இன்னும்
வேறு ஏதேனும் சொல்லவேண்டுமானால் சொல்லுங்கள், சொல்கிறேன். கீழே கமென்ட் பாக்ஸ் இருக்கிறது.
*****

No comments:
Post a Comment