ரஜினி, கமல் - யார் ஹீரோ? – அன்றே பாடிய காரிக்கண்ணனார்!
ரஜினியும்
கமலும் இணைந்து இனி நடிப்பார்களா?
இந்தக்
கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.
இருவரும்
இணைந்து நடிக்கப் போகிறார்கள்.
நெல்சனின்
இயக்கத்தில், அனிருத்தின் இசையில் அந்தப் ப்ளக்பஸ்டர் தொடங்கி விட்டது.
நேற்று
அந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி விட்டது.
அந்தப்
ப்ரோமோ வீடியோவில் கேட்கப்படும் யார் ஹீரோ என்ற அந்தக் கேள்விதான் இப்போது தமிழகத்தின்
ஹாட் டாபிக்.
47 வருடங்களுக்குப்
பிறகு திரையுலகின் இரண்டு துருவ நட்சத்திரங்கள் மீண்டும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன.
இருவரும்
இணைவதில் கோலிவுட்டில் ஒரு புது அப்கிரேடேசன் நன்றாகவே தெரிகிறது. படம் ஆயிரம் கோடியில்
ஹிட்டடிக்கும் என்ற ஆருடம் காதைப் பிளக்கிறது.
ப்ரோமோவில்
அந்த பென்ஸ் கார், அந்த ரெட்ரோ லுக் எல்லாமே எண்பதுகளின் நாஸ்டால்ஜியாவை இன்றைய டிஜிட்டல்
துல்லியத்தில் பார்ப்பது போல் இருக்கிறது.
அறிவியல்
விதிகளின்படி பார்த்தால், இரு துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்காது, மற்றும் ஒரே இடத்தில்
இரண்டு அதிர்வலைகள் மோதுவது ஆபத்தானது. ஆனால் சினிமாவில் அதுதான் மேஜிக்.
கமல்
உலக நாயகன், ரஜினி சூப்பர் ஸ்டார். கமல் உலக ஸ்டாராகவா? ரஜினி சூப்பர் நாயகனாகவா? நெல்சன் என்ன மேஜிக்கை வைத்திருக்கிறார் என்பதற்கான
அப்டேட்டுகள் இனி தமிழ்நாட்டை அதிரடிக்கும்.
நீங்கள்
புறநானூற்றின் 58 ஆவது பாடலைப் படித்திருக்கலாம். காரிக்கண்ணனார் பாடியது. அது இது,
நீயே தண்புனற் காவிரிக் கிழவனை இவளே
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே நீயே
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை இவனே
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென
வரைய சாந்தமும், திரைய முத்தமும்
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ
இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே
அதனால் நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்
காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி வென்று வென்று
அடுகளத்து உயர்க நும் வேலே கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே (புறநானூறு, 58)
என்ன
சொல்ல வருகிறார் புலவர் என்றால், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும்,
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே அமர்ந்திருப்பது என்பது
வானத்தில் சூரியனும் சந்திரனும் ஒன்றாகத் தோன்றுவது போல் இருக்கிறது, உங்கள் நட்பு
நீடிக்கட்டும் என்கிறார்.
நாம்
என்ன சொல்ல வருகிறோம் என்றால் நட்போடு நடிப்பும் நீடிக்கட்டும் என்று.
ஆக,
புலவர் காரிக்கண்ணனார் அன்று சொன்ன அதே சூரிய சந்திர லாஜிக் தான் இன்றும். அது யுனிவர்சல்
நாயகன், சூப்பர் ஸ்டார் என்று மாறியிருக்கிறது. மற்றபடி ரஜினி அந்தச் சூரியன், அதே
பிரகாசம், வேகம், மாஸ். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். சூரியனும் ஒரு நட்சத்திரம்தானே.
கமல் அந்தச் சந்திரன், அதே குளுமை, கலைநயம், ஆழம். இந்த உலகுக்கு ஒரே நாயகமாக அந்தச்
சந்திரன்தானே இருக்கிறது.
ப்ரோமோவில்
ரஜினி அந்தக் ஏறும் போது ஹீலியம் வாயுவின் வேகம் தெரிகிறது. கமல் பக்கத்தில் நின்று
அந்தச் சாவியைப் பிடிக்கும் போது அப்படி ஓர் அமைதி தெரிகிறது. இயற்பியல் விதிகளின்படி
பார்த்தால் அது ஒரு செம்மையான சமநிலை.
ப்ரோமோவில்
நெல்சன் தன் வழக்கமான டார்க் ஹியூமர் பாணியில் இருவரையும் கலாய்த்திருப்பது ஒரு புத்திசாலித்தனமான
தெறிக்கவிடும் விளம்பரம். ரஜினி ஸ்டைலாகக் கார் சாவியைத் தூக்கிப் போட, கமல் அதை இயல்பாகப்
பிடிப்பது என்பது இது வெறும் நடிப்பு அல்ல, காலங்காலமாகத் தொடரும் ஒரு நட்பின் தொடர்ச்சி.
சங்கப் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடுவார்கள். நெல்சன் இவர்களைக் கிண்டல் செய்து
ரசிக்க வைக்கிறார். இது ரிவர்ஸ் சைக்காலஜி
சங்கப்
பாடல்களில் உவமை மிக முக்கியம். இந்தப் ப்ரோமோவில் வரும் அந்தப் பழைய பென்ஸ் கார் ஓர்
உருவகம். நாங்கள் பழைய ஆட்கள் தான், ஆனால் இன்ஜின் இன்னும் பவர்ஃபுல் என்று சொல்லாமல்
சொல்கிறார்கள்.
நமக்கும்
எப்போதுமே பழைய விஷயங்கள் மீது ஒரு தீராத கிராவிட்டி உண்டு. கமல் – ரஜினியின் நினைத்தாலே
இனிக்கும் அப்படிப்பட்ட ஒன்று. அப்படிப்பட்ட ஒன்றாகவும் இப்படம் இருக்கலாம்.
ஒரு
தலையாவது உருளாமல் நெல்சன் படமா என்றால் அதற்கான அறிகுறி எதுவும் இந்தப் ப்ரோமோவில்
இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் லைட் ஹார்ட் உள்ளவர்களுக்கும் ஏற்றதாக இப்படம்
இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை
ஹீரோ – வில்லன் மேஜிக் வேண்டும் எனறு நினைத்தால் அந்த வில்லன் பேக்கேஜக்கு இது எப்படி
இருக்கு ரஜினியை அடித்துக் கொள்ள ஆளில்லை.
கமல்
வண்டியை எடுக்கிறார், ரஜினி ஆசுவாசமாக அமர்ந்திருக்கிறார். அதனால் ரஜினிக்கு இணையான
இன்னொரு ஹீரோவாகவும் கமல் இருக்கலாம். கமல் பெயர் முன்னதாகவும், ரஜினி பெயர் அடுத்தாகவும்
இருப்பதால் கமலுக்கு இணையான ஹீரோவாக ரஜினியும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் ஒருவரை
ஒருவர் விட்டுக் கொடுத்து விட மாட்டார்கள் என்பது அவர்கள் ப்ரோமோவில் செய்யும் மேக்கப்பிலேயே
தெரிகிறது.
அப்புறம்
அந்தப் ப்ரோமோவில் ரஜினியும் கமலும் முன்னால் அமர்ந்திருக்க, நெல்சனும் அனிருத்தும்
பின்னால் அமர்ந்திருக்க கார் ஜெட் வேகத்தில் புறப்படுகிறது. இவர்கள் இருவரும் காட்டும்
வழியில்தான் நெல்சனும் அனிருத்தும் படத்தை இயக்கவும் இசைக்கவும் முடியும் என்பதற்கான
படிமமோ என்னவோ அது.
இவையெல்லாம்
டீகோட்கள்தான். படம் வெளிவந்தால்தான் மற்றவை தெரியும். அதுவரை என்ன செய்வது என்பதற்கு
ஒரு பார்முலா இருக்கிறது. அது வெயிட் அன்ட் வாட்ச்.
*****

No comments:
Post a Comment