புதிய பாப்பா பாட்டு
வேன்கள் வந்து நின்றாலே
பள்ளிப் பிள்ளைகள் இறங்கிடுமே
இறங்கிய வேகத்தில் திமுதிமுவென
முதுகில் மூட்டையைச் சுமந்திடுமே
மூட்டையுடன் வீடு வந்து சேர்ந்தால்
வீட்டுப்பாடம் செய்ய துவங்கிடுமே
அங்கிள் யாரும் வந்தால்
ரைம்ஸ் சொல்லி ஆடிடுமே
ஆன்டிகள் யாரும் வந்தால்
ரேங்க் கார்டைக் காட்டி வெரி
குட் கேட்டிடுமே
என்ன படிக்கப் போகிறாய் என்றால்
எம்.பி.பி.எஸ். என்றிடுமே
நீண்ட நேரம் அமர்ந்திருந்தால்
டாட்டா காட்டிக் கிளப்பிடுமே
மம்மி வந்தால்
நல்ல பிள்ளையாய்ப் படித்திடுமே
டாடி வந்தால்
செல்லைப் பிடுங்கி ஓடிடுமே
மம்மி டாடி இல்லையென்றால்
வீட்டை ரெண்டாய் ஆக்கிடுமே
*****
No comments:
Post a Comment