19 Dec 2022

நீ பன்மை அல்ல

நீ பன்மை அல்ல

நீ நிலா

நிலாக்கள் அல்ல

நீ தென்றல்

தென்றல்கள் அல்ல

நீ பூ

பூக்கள் அல்ல

நீ வானவில்

வானவில்கள் அல்ல

நீ தேவதை

தேவதைகள் அல்ல

நீ மயில்

மயில்கள் அல்ல

நீ நட்சத்திரம்

நட்சத்திரங்கள் அல்ல

நீ தளிர்

தளிர்கள் அல்ல

நிச்சயம் இவற்றில்

நீ ஏதோ ஒன்று

இரண்டோ மூன்றோ

நான்கோ ஐந்தோ

ஆறோ ஏழோ

எட்டோ ஒன்பதோ

பத்தோ பதினொன்றோ அல்ல

ஒன்றே ஒன்று மட்டும்

நீ ஒருமை

பன்மைகள் அல்ல

*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...