தன்னைத் தானே அடித்துக் கொள்பவர்
சாட்டையை வாஞ்சையோடு பார்க்கிறார்
வாஞ்சையாகப் பார்த்த
சாட்டையால் விடுவிடுவென்று
அடுத்தடுத்து அடித்துக் கொள்கிறார்
அவருக்கொரு வேலை மிச்சமாகும் என்று
சாட்டையால் அடிக்கும் பணியைப்
பங்கு கேட்ட போது நிராகரித்து விட்டார்
இன்னொருவர் அடிப்பதை விரும்பாதவர்
தன்மானம் உள்ளவனாக இருக்கக் கூடும் என்ற
தத்துவத்தை உடைத்து எறிந்த அவர்
தன்னைத் தானே உயிர் போக்கிக் கொள்பவர்கள்
மற்றவர்கள் கொலை செய்வதற்கு
வாய்ப்பளிக்க விரும்பாதவர்கள் என்று
எப்படிச் சொல்ல முடியும் என்று
காதருகே வந்து கிசுகிசுத்து விட்டுப் போகிறார்
*****
சாட்டையை வாஞ்சையோடு பார்க்கிறார்
வாஞ்சையாகப் பார்த்த
சாட்டையால் விடுவிடுவென்று
அடுத்தடுத்து அடித்துக் கொள்கிறார்
அவருக்கொரு வேலை மிச்சமாகும் என்று
சாட்டையால் அடிக்கும் பணியைப்
பங்கு கேட்ட போது நிராகரித்து விட்டார்
இன்னொருவர் அடிப்பதை விரும்பாதவர்
தன்மானம் உள்ளவனாக இருக்கக் கூடும் என்ற
தத்துவத்தை உடைத்து எறிந்த அவர்
தன்னைத் தானே உயிர் போக்கிக் கொள்பவர்கள்
மற்றவர்கள் கொலை செய்வதற்கு
வாய்ப்பளிக்க விரும்பாதவர்கள் என்று
எப்படிச் சொல்ல முடியும் என்று
காதருகே வந்து கிசுகிசுத்து விட்டுப் போகிறார்
*****
No comments:
Post a Comment