பொது கழிவறைகளில் சங்கோஜப்படாமல் யாவரும் சென்று வரும் நாளே நாடு சுதந்திரம் பெற்ற நாள் என்பேன்.
நம்மைப் போன்ற நாடுகளில் பொது கழிவறைகளைப் பராமரிப்பது என்பது பெயரளவுக்கு இருக்கிறதா? அல்லது பராமரிப்பது என்பது இல்லாமலே இருக்கிறதா? என்பது விவாதிக்கப்பட வேண்டிய பட்டிமன்ற தலைப்பு.
பொது இடங்கில் இயங்கும் கட்டணக் கழிவறைகளும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லைதான். பொது கழிவறைகளுக்கு சற்று பரவாயில்லை ரகம்தான்.
கழிவறைப் பணியாளர்களை நாம் அணுகும் விதத்திற்கும், பொது கழிவறைகளை நாம் அணுகும் விதத்திற்கும் அதிக வேறுபாடில்லை.
உலகின் உன்னதப் பணியாளர்கள் என்றால் முதல் இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் அவர்களே. அவர்களுக்கான ஊதியம், சுகாதாரம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றிலும் பொது சமூகம் அக்கறை கொள்ள வேண்டும்.
நல்ல குடிநீர், நல்ல உணவு, நல்ல கழிவறை இவைகள் நாகரிகச் சமூகத்தால் உறுதி செய்யப்பட வேண்டும்.
நல்ல குடிநீரைப் பாட்டிலில் தேட வேண்டியிருக்கிறது. விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.
நல்ல உணவைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக மாறிக் கொண்டிருக்கிறது. ரசாயனங்களும், பூச்சிக்கொல்லிகளும் நிறைந்த உணவைத்தான் நல்ல உணவென கொள்ள வேண்டியிருக்கிறது.
நல்ல கழிவறை என்பது கனவாகப் போய் விடுமோ என்பது போல இருக்கிறது. தூய்மை என்று நாம் சொல்வது தூய்மையான குடிநீர், தூய்மையான உணவு, தூய்மையான கழிவறை ஆகிய மூன்றிலும் இருக்கிறது. இம்மூன்றையும் உறுதிபடுத்தி விட்டால் அந்த தேசத்தில் மருத்துவர்களின் சேவை பாதியாகக் குறைந்து விடும். ஒரு தேசத்தில் மருத்துவர்களின் சேவை மிக அதிகமாகத் தேவை என்றால் மேற்கண்ட மூன்றையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம்.
*****

No comments:
Post a Comment