விழா தொடங்க சிறிது நேரமே இருந்தது. புரஜெக்டர் எனும் படவீழ்த்திக்கான திரை கிடைக்கவில்லை. வழக்கமாக பழைய பதாகைகளின் (ப்ளெக்ஸ்கள்) பின்புறம் திரையாக தொங்க விடப்படும். கஜா புயலால் கூரை இழந்த பலர் ப்ளெக்ஸ்களை வாங்கிச் சென்றதில் கைவசம் எதுவுமில்லை. என்ன செய்வது என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த நேரம்.
அப்போது ஏற்பாட்டாளர்களில் ஒருவர் என் வேட்டியை அவிழ்த்து தருகிறேன் என்றார். இப்படிப்பட்ட அன்பாளர்கள் மத்தியில் வாழ்கிறோம் என்பதை நினைத்த போது மயிர் கூச்செரிந்தது. அதற்காக அவிழ்த்து கொடுங்கள் என்று வாங்கி விட முடியுமா? வேட்டியை அவிழ்த்துக் கொடுத்து விட்டு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, என்னிடம் பழைய கைலி ஒன்று இருக்கிறது அதைக் கட்டிக் கொள்கிறேன் என்றார்.
யோசனை நன்றாகத்தான் இருக்கிறது, அதற்காக இப்படி அதீதமாக யோசிக்க வேண்டாமே என்றேன். அதற்கு என்ன ஐயா செய்ய முடியும்? திடீரென்று இப்போ எங்கே போய் வேட்டி வாங்க முடியும்? அதுவும் ராத்திரி நேரத்தில் கிராமத்தில் யார் துணி கொடுப்பார்கள் என்றார். அது சரி! கிராமத்தில் இரவாகி விட்டால் துணி வாங்க முடியாது.
எனக்கு என்னவோ அந்த அன்பாளர் மயிலுக்குப் போர்வைப் போர்த்திய பேகனைப் போன்ற வள்ளலாகத் தோற்றம் அளித்தார். இவர் வேட்டியை வாங்கியா படவீழ்த்திக்கான திரையை அமைக்க வேண்டும் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நேரத்தல் பழைய பதாகையை (ப்ளக்ஸை) எங்கிருந்தோ ஒருவர் கொண்டு வந்தார். எப்படியோ பழைய பதாகை வந்ததில் அவர் வேட்டியை வாங்கி அவரை நவீன பேகன் ஆக்காமல் விட்டோம்!
*****

No comments:
Post a Comment