தொடர்புகள்
ஒவ்வொருவரையும் நேரில்
பார்த்துச் சொல்வதன்
சிரமங்கள் குறையுமென
கடிதங்கள் எழுதுவதற்கான
முகவரியை வாங்கிக் கொண்டார்கள்
எழுதிய கடுதாசி தகவல்
சொல்ல
நான்கு நாட்கள் ஆகிறதென
தொலைபேசி எண்களைப் பெற்றுக்
கொண்டார்கள்
நினைத்த இடத்தில் நினைத்த
மாத்திரத்தில் பேசலாமென
செல்போன் எண்களைப் பகிர்ந்து
கொண்டார்கள்
இந்த நொடியில் இருப்பதை
அடுத்த நொடி மாற்றுவதற்குள்
தெரிவித்துக் கொள்ள
வேண்டுமென
பேஸ்புக் ஐ.டி.யையும்,
வாட்ஸ் அப் எண்ணையும்
பகிர்ந்து கொண்டார்கள்
அவரவர் இடங்களில் இருந்து
கொண்டு
அவரவர் வாழ்வதற்கு வசதியாகத்தான்
இருக்கின்றன
இவைகள் எல்லாம்
கணவன் நியூயார்க்கிலும்
மனைவி சென்னையிலும்
தனித்தனிக் குடித்தனம்
இருந்து கொண்டு
குடும்பம் நடத்துவதற்கு.
*****
No comments:
Post a Comment