14 May 2017

ஈரமழை


எண்ணிப் பார்ப்பவர்கள்
படுக்குமிடம் தோறும் வந்து
தலைநீட்டத் தவறுவதில்லை நட்சத்திரங்கள்
எண்ணுவதற்கு யோசிப்பவர்கள் நாம்
நிலா பொழியும் அந்த இரவில்
சலிக்காமல் எண்ணிக் கொண்டிருப்போம்
வீசும் மென்காற்றை அலட்சியப்படுத்தியபடி
நாற்புறமும் காற்று வராத சுவருக்குள் அடைபட்டுக் கொண்டு
மின்விசிறியை மெதுவாக சுழல விட்டுக் கொண்டு
பணக்கட்டுகளை ஒவ்வொன்றாக ஒவ்வொரு தாளாக.
*****

ஈரமழை
அம்மா, அப்பா, செல்ல நாய்
பிறந்த வீட்டை விட்டு
அவனோடு ரயிலில் சென்று கொண்டிருக்கும்
உக்கிரமான அந்த நண்பகல் வேளையை
ஏளனம் செய்வது போல
திடீரென்று வானில் திரண்ட
கருமேகங்கள் பொழியும் மழையில்
பின்னோக்கிச் சென்று விட்ட காலத்தை
முன்னோக்கிக் கொண்டு வந்து
நிறுத்துவது போல வந்து
கசிய விட்டுப் போகும்
இருபது வருடங்களை நனைத்து விட்டுப் போகும்
ஈர நினைவுகள்.
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சி எனும் மந்திரம்

மகிழ்ச்சி எனும் மந்திரம் இந்த உலகில் எவ்வளவோ புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது எல்லாவற்றையும் புரிய வைக்க அன்பே நீ என்னுடன் இருப்பாயா? ...