முளை கொள்ளும் கானகம்
பறிக்கும் உயரத்தில்
இருக்கும் பழத்தை
கல்லெடுத்து அடித்தான்.
விழுந்து கிடந்த பழமெடுத்து
குருவியை அடித்தான்.
உயிரிழந்து குருவி எடுத்து
தணலில் வாட்டித் தின்றான்.
வாட்டித் தின்ற நெருப்பெடுத்து
பெருங்கானகத்துள் வீசினான்.
பழங்களை உதிர்த்து
கானக உயிர்களின்
உடல்களை உருக்கி
விரியும் தீ தணிக்க
எங்கிருந்தோ ஒரு மரம்
அனுப்பி வைத்த
மேகத்தினின்று பொழியும்
மழையில்
எரிந்தும் எரியாமல் இருக்கும்
ஒரு விதையிலிருந்து
மீண்டும் சூல் கொள்ள
முளை விடுகிறது காடு!
*****
No comments:
Post a Comment