முளை
கிளைகளைக் கழித்தவர்கள்,
வேர்களை வெட்டி வீழ்த்தியவர்கள்
விதைகளை இல்லாமல் செய்தவர்கள்
கொன்று புதைத்த இடத்தில்
மறுபடியும் முளை விடுகிறது
காதல் செடி.
*****
கனவு
டீச்சரைக் கண்டால் மிரளும்
அம்முக்குட்டியிடம் கேட்டேன்
ஒருநாள்,
"படிச்சு என்னவாகப்
போறே?"
அம்முக்குட்டி சொன்னாள்
ஆசை ஆசையாக
"டீச்சராகப் போகிறேன்!"
*****
No comments:
Post a Comment