அதனால்...
ஊருக்கு ஒரு கவிஞன்
இருக்க வேண்டும்
என்பதற்காக
எழுதிக் கொண்டிருக்கிறேன்
இல்லையெனில்
யாருக்கோ கிடைக்க வேண்டிய
நல்வாய்ப்பைத் தட்டிப்
பறித்து
யாரிடமோ
ஒப்படைத்து விட்டு
தேடிக் கொண்டிருப்பேன்
எனக்கான
நல்வேலையை!
*****
அதன் பெயர்...
வலிக்காமல் இருக்க
மருந்து கொடு என்றேன்
கொடுத்தாய்
மருந்தின் பெயர்
வலி
என்றிருந்தது!
*****
No comments:
Post a Comment