8 Feb 2017

காணாமல் போன கடவுள்


காணாமல் போன கடவுள்
ஊனை உருக்கி, உள்ளொளிப் பெருக்கி, தவம் செய்து கடவுளைக் கண்ட மித்ரானந்தா எடுத்து வைத்திருந்த செல்பியில் காணாமல் போயிருந்தார் கடவுள்!


நிறைவு
    எல்லாரும் செல்பி எடுத்துக் கொண்ட பின் இனிதே நிறைவுற்றது விநாயகர் சதுர்த்தி!


நல்லவேளை
     “நல்லவேளை நடுரோட்டுல வெட்டுனாங்க!”
     "ஆமா ஏட்டய்யா! இல்லேன்னா நாலு நாள் நாறிப் போன பின்னாடி போய் எடுத்துட்டு வந்து போஸ்ட்மார்டம் பண்ணணும்!" என்றார் கான்ஸ்டபிள்.

No comments:

Post a Comment