|
தாகம்
"தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது!" என்ற பெங்களூர்
கிட்டப்பா, தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட்டிருந்த மினரல் வாட்டர் பாட்டிலில் தாகம்
தணித்துக் கொண்டிருந்தான்.
|
|
வேண்டுதல்
"ஒரு குவார்ட்டர் வாங்கி வெச்சு சுடலைமாடன்கிட்ட வேண்டிக்கோ! அப்பாலுக்க
உம் புருசன் குடிக்க மாட்டான்!" என்றார் சாமியாடி பாண்டிமுருகு!
|
|
எப்படி?
"வயல்கள் எப்படி அழிஞ்சுப் போச்சு?" என்று யோசித்துக் கொண்டிருந்தான்
ரியல் எஸ்டேட்காரன் கட்டி விற்பனை செய்த வீட்டை தவணை முறையில் வாங்கிய சகாதேவன்.
|
No comments:
Post a Comment