9 Feb 2017

பெரிய மற்றும் சிறிய


பெரிய மற்றும் சிறிய
பெரிய கடல்
கடக்க
சிறிய துடுப்பு
போதும்!

பெரிய வானம்
அளக்க
சிறிய சிறகு
போதும்!

பெரிய பூமி
நடக்க
சிறிய பாதம்
போதும்!

பெரிய வாழ்க்கை
வாழ
சிறிய அன்பு
போதும்!

பெரிய ஞானம்
அறிய
சிறிய துறத்தல்
போதும்!

பெரிய புத்தகம்
புரிய
சிறிய அனுபவம்
போதும்!

பெரிய இருட்டு
தெரிய
சிறிய வெளிச்சம்
போதும்!

பெரிய யானை
அலற
சிறிய எறும்பே
போதும்!
*****

No comments:

Post a Comment