எச்சரிக்கைப் பலகை
நாயொன்று
லோல்பட்டு
லோன் போட்டு
வில்லங்கங்களை
விலாசித் தள்ளி
அவஸ்தைப்பட்டு
அப்ரூவ்டு மனை வாங்கி
வீடு
கட்டி முன்னே ஒரு பலகை வைத்தது
“மனிதர்கள்
ஜாக்கிரதை”
*****
கலியுக அன்னம்
பாலையும்
தண்ணீரையும்
பிரித்துப்
பருகும்
அன்னம்
இக்கலியுகம்
வந்த பிறகு
பாக்கெட்
பாலில்
பாலையும்
ரசாயனத்தையும்
பிரித்துப்
பருகிக் கொண்டிருக்கிறது
*****
மறதி கொண்டவன் நெஞ்சம் போல
பாஸ்வேர்ட்
மறந்து
பர்கெட்
பாஸ்வேர்ட் கொடுக்க
அது
பாஸ்வேர்டை
இமெயிலுக்கு
அனுப்ப
இமெயிலின்
பாஸ்வேர்ட் மறந்தவன்
என்ன
செய்வானோ
அதைத்தான்
செய்கிறேன்
நான்
செய்ய மறந்த வேலையை
உன்னிடம்
சொல்லி
நீயும்
மறந்து
அதே
வேலை என்னிடம் வந்த போது!
*****

No comments:
Post a Comment