ஒரே வழி
இன்னும் மனம் தயாராகாத போது
என்ன செய்ய முடியும்
காத்திருக்கத்தான் வேண்டும்
தொடங்காமல் இருப்பதற்காக
வருத்தத்திற்குட்படுத்தப்படலாம்
காத்திருப்பின் நிர்பந்தத்தில்
நிறுத்தப்பட்டிருக்கும்
நான் என்ன செய்வேன்
மனம் தயாராகி விட்டால்
அதன் பின் வேகம் உங்களுக்குப்
பிடிபடாது
இலக்குகளும் புரிபடாது
மனக்குதிரையின் வேகம்
மனித கணக்கின் குதிரை வேகத்தினும்
அதிகம்
மனம் தயாராகும் வரை
காத்திருப்பு ஒன்றே வழி
*****
No comments:
Post a Comment