பெரியவர்களைப் பிரதியெடுத்தல்
ஒரு நாய் பொம்மை
அது நாய் பொம்மைதான்
நிஜநாய் உட்கார்ந்திருப்பதைப்
போல
உங்களுக்குப் பொம்மைகள்
எப்படித் தெரிகின்றன
பிம்மங்களாய் பிரதிகளாய்
அசலாய் வேறெப்படி
அசலிருக்க பொம்மை செய்பவர்கள்
எப்படி பிரதியெடுக்கப்படுகிறார்கள்
எவ்வளவோ பொம்மைகள்
வாழ்க்கைக்கும் விளையாட்டுக்கும்
தம்மை விற்று
விற்பவருக்குக் காசு தரும்
பொம்மைகள்
பிரதிச் சமூகத்தின் ஆகச்
சிறந்த தியாகிகள்
ஒரு பொம்மையில் ஒளிந்திருக்கும்
உயிர்
பிரிந்து விடும் போது
நானும் நீங்களும் பெரியவர்களாகி
விடுகிறோம்
*****
No comments:
Post a Comment