மூதாதை ஆகுதல்
வெளியேற்றப்படும் போது
என்ன செய்ய முடியும்
ஆதாமையும் ஏவாளையும் வெளியேற்றுவது
போல
வெளியேறும் முன்
ஓர் உலகம் உள்ளதெனின்
வெளியேற்றத்திற்குப் பின்னும்
ஓர் உலகம் இருக்கிறது
வெளியேற்றப்படுபவர்களே
அந்த உலகின் தாயும் தந்தையும்
கட்டளையை மீறும் போதோ
மாற்றங்களை நிகழ்த்தும் போதோ
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட
வெளியேற்றப்பட்ட உலகின்
தாயாகவோ தந்தையாகவோ
நீங்கள் ஆவிர்கள்
உயிரணுவை வெளியேற்றி தந்தையாக
ஆனவரிடமும்
சிசுவை வெளியேற்றி தாயாக
ஆனவரிடம்
இதை நீங்கள் கேட்டுப் பாருங்கள்
*****
No comments:
Post a Comment