உங்கள் குட் மார்னிங் உங்களிடமே இருக்கட்டும்
கட்டில் வரை
கமகமவென்ற வாசனையை
விரயம் செய்து கொண்டு
தேடி வந்து விட்டது பெட்
காப்பி
போட்டு நெடுநேரம்
துலாவ வரும் நாக்கைத் தேடியிருக்குமோ
என்னவோ
பல்லைத் துலுக்காமல் குடித்தாலும்
பரவாயில்லை போதும் தூக்கமெனப்
போர்வையைப் பிடுங்கி வைத்தபடி
நாசுக்காய் எழுந்திரு என்று
சொன்னதோடு சென்றிருக்கிறாள்
படி தாண்டி வந்து அடிக்காத
பத்தினி
ஏசு புத்த காந்தி மனம் பெற்றதெப்படியோ
ஒன்பது மணிச் சத்தம்
ஓங்கிச் செவுளில் அடித்த
பின்னும்
ஒரு காலும் மேனேஜரிடமிருந்து
வரவில்லை
டாய்லெட் பேறு கிடைக்கப்
பெற்றாரோ என்னவோ
குளிக்காமல் சென்றாலும்
பத்து நாள் ஜீன்ஸை அணிந்தாலும்
முகம் சுளிப்பதில்லை
பக்கத்து டேபிள் பார்கவி
காது மூக்கு தொண்டை பிரச்சனையுண்டோ
என்னவோ
ஆக மொத்தம்
ஏகப் பிரம்மாதம்
இந்தப் பொழுது
இனிய பொழுதாகவே இருக்கிறது
குட் மார்னிங் சொல்லி
கெடுத்து விடாதீர்கள்
கடிகாரம் அதுவாகவே
ஆப்டர்நூனைப் பார்த்துச்
சுழன்று கொள்ளும்
*****
No comments:
Post a Comment