12 Dec 2022

எனக்கொரு பேருந்து இருக்கிறது

எனக்கொரு பேருந்து இருக்கிறது

பேருந்து என்னை அழைத்துச் செல்கிறது

கொண்டு வருகிறது

அதற்கொரு ஓட்டுநர் இருக்கிறார்

நடத்துநர் இருக்கிறார்

நடுவில் தள்ளி நசுக்க

பெருங்கூட்டம் இருக்கிறது

சாலையில் வேகத்தடைகள் இருக்கின்றன

பாதாளப் பெருங்குழிகள் இருக்கின்றன

நடுவழியில் பேருந்து நின்றிருக்கிறது

பெருமழையில் ஒரு நாள் வராமல் இருந்திருக்கிறது

எந்த இருக்கை எந்த இடம் என்று

நிச்சயமில்லா விட்டாலும்

எங்கேயோ ஓர் இடம் தந்து

பேருந்து என்னை அழைத்துச் செல்கிறது

என்னை அழைத்துச் செல்லவும்

கொண்டு வந்து விடவும்

ஒரு பேருந்து இருக்கிறது என்றால்

ஆச்சரியமாய்ப் பார்க்கிறார்கள்

ஆச்சரிமாய்ப் பார்க்க என்ன இருக்கிறது

உங்கள் இரு சக்கர வாகனத்தையோ காரையோ

நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டும்

அழைத்துக் கொண்டு வர வேண்டும்

அப்படியானால் நீங்கள் ஆச்சரிமாய்ப் பார்க்க

காரணம் இருக்கத்தான் செய்கிறது

என் ஆச்சரியப் பேருந்து தினம் தினம் வருகிறது

எனக்குத் துணையாய்

எத்தனையோ பேரை அழைத்துக் கொண்டு

உங்களுக்குத் துணையாய்

ஒருவரையேனும் உங்கள் வாகனம் அழைத்து வந்திருக்கிறதோ

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...