13 Dec 2022

மகிழ்ச்சியைப் பூட்டும் கலை

மகிழ்ச்சியைப் பூட்டும் கலை

எப்போது கேட்டாலும்

இப்போது அப்பாவிடம் காசில்லை என்கிறார்

காசிருக்கும் போது சொல்லுங்கள் அப்பா

கேட்டுக் கொள்கிறேன் என்கிறாள் பாப்பா

காசிருப்பதைச் சொல்லும் நேரம்

வந்து விடக் கூடாதென்று

பரபரக்கும் அப்பா

ஒவ்வொரு பைசாவையும்

முதலீடாய்ப் பூட்டியபடி இருக்கிறார்

மகிழ்ச்சியின் திறவுகோலை

தேடியபடி இருக்கிறாள் பாப்பா

அப்பாவியாய் அப்பாவிடம்

அப்பா இப்போ காசிருக்கா என்கிறாள்

வந்ததும் சொல்கிறேன் மகளே என்றபடி

மகிழ்ச்சியின் கதவை

பூட்டியபடி சென்று கொண்டிருக்கிறார் அப்பா

*****

No comments:

Post a Comment